/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க டிச.31 கடைசி நாள்
/
பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க டிச.31 கடைசி நாள்
பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க டிச.31 கடைசி நாள்
பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க டிச.31 கடைசி நாள்
ADDED : அக் 19, 2024 01:18 AM
பிறப்பு சான்றிதழில் பெயர்
சேர்க்க டிச.31 கடைசி நாள்
கோபி, அக். 19-
பிறப்பு சான்றிதழில் டிச.,31க்குள் பெயர் சேர்க்க, கோபி நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
குழந்தை பிறந்ததும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொது சுகாதாரத்துறை மூலமாக, பிறப்பு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அந்த சான்றிதழ்களில், குழந்தை பிறந்த, 15 ஆண்டுகளில் பெயர் சேர்க்க வேண்டும். அவ்வாறு பெயர் சேர்க்காதவர்கள், வரும் டிச.,31க்குள் பெயர் சேர்க்க கோரி, கோபி நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், '2009ம் ஆண்டுக்கு பின் பிறந்தவர்கள் பிறப்பு சான்றிதழில் தங்கள் பெயரை பதிவு செய்ய டிச.,31ல் கடைசி நாளாகும். அதன்பின் பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்ய இயலாது. அதனால் ஏற்கனவே பிறப்பு சான்று பெற்ற அலுவலகத்தை நேரில் அணுகி, விண்ணப்பித்து பெயர் பதிவேற்றம் செய்து கொள்ளவும்' என, கூறப்பட்டுள்ளது.