/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கிருஷ்ணகிரி நகரிலுள்ள டோல்கேட்டை இடமாற்ற முடிவு?
/
கிருஷ்ணகிரி நகரிலுள்ள டோல்கேட்டை இடமாற்ற முடிவு?
ADDED : ஆக 10, 2025 01:36 AM
ஓசூர், கிருஷ்ணகிரி நகரிலுள்ள டோல்கேட்டை, சின்னாறு அருகே இடமாற்றம் செய்ய, மத்திய அரசு தயாராகி வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே, பெங்களூரு தேசிய நெடுஞ்
சாலையில், டோல்கேட் அமைந்துள்ளது. இங்கு நாளொன்றுக்கு, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து ஓசூர் வழியாக கர்நாடகா செல்லும், 40,000 வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
தமிழக அளவில் அதிக சுங்க கட்டணம் வசூலாகும் டோல்கேட்டாக கிருஷ்ணகிரி உள்ளது. கிருஷ்ணகிரி நகரத்தில் டோல்கேட் அமைந்துள்ளதால், விவசாய விளை
பொருட்களை வாகனங்களில் எடுத்து செல்லும் விவசாயி கள், மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி., அலுவலகத்திற்கு மனு கொடுக்க வரும் மக்கள், கட்டாயம் சுங்க கட்டணம் செலுத்தினால் தான் செல்ல முடியும் என்ற நிலை உள்ளது. நகரிலுள்ள உள்ளூர் வாகன ஓட்டிகளும் டோல் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது காய்கறிகள் மற்றும் வாடகை உயர்வுக்கு வழிவகுக்கிறது. மொத்தம், 59.87 கி.மீ., துார தேசிய நெடுஞ்சாலைக்கு, கிருஷ்ணகிரி டோல்கேட்டில் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
கனரக வாகனங்கள் ஒருமுறை நுழைய அதிகபட்சம், 590 ரூபாய், இருமுறைக்கு, 880 ரூபாய், கார் ஒருமுறை நுழைய, 90 ரூபாய், இரு
முறைக்கு, 135 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இப்படி, உள்ளூர் வாகன ஓட்டிகளும் அதிகளவு கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. அதனால், நகருக்குள் உள்ள டோல்கேட்டை இடமாற்றம் செய்ய பல ஆண்டுகளாக கோரிக்கை உள்ளது. நீதிமன்றத்திலும் வழக்கு நடந்து வருகிறது. ஆனால், தேசிய நெடுஞ்சாலைத்துறை டோல்கேட்டை இடமாற்றம் செய்யாமல், தொடர்ந்து சுங்க கட்டணம் வசூல் செய்வதில் கண்ணும், கருத்துமாக உள்ளதால், உள்ளூர் வாகன ஓட்டிகள் எரிச்சல் அடைந்துள்ளனர்.
இது குறித்து, கிருஷ்ணகிரி, காங்., - எம்.பி., கோபிநாத் கூறுகையில், ''கிருஷ்ணகிரி டோல்கேட்டை இடமாற்றம் செய்து, சின்னாறு அருகே அமைக்க, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை கடந்த சில நாட்களுக்கு முன் சந்தித்து பேசியுள்ளேன். அவரும், நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என்றும், மாற்றுவதாகவும் உறுதி அளித்துள்ளார்,'' என்றார்.