ஈரோடு, ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு நேற்று, ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், திருப்பூர், தேனி, மதுரை மாவட்டங்களில் இருந்து மாடுகளை விற்பனைக்கு அழைத்து வந்திருந்தனர்.
இதில், 6,000 முதல், 22,000 ரூபாய் மதிப்பில், 40 கன்றுகள், 22,000 முதல், 70,000 ரூபாய் மதிப்பில், 150 எருமை மாடுகள், 23,000 முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 200 பசு மாடுகள், 70,000 ரூபாய்க்கு மேலான விலையில், 50க்கும் மேற்பட்ட முற்றிலும் கலப்பின மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநில விவசாயிகள், வியாபாரிகள் மாடுகளை வாங்கி சென்றனர். கோடை காலம் அதிகமாக உள்ள நிலையில், வியாபாரிகள் மாடுகளை வாங்க ஆர்வம் காட்டாததால், 600க்கும் மேற்பட்ட மாடுகள் வரும் நிலையில், 450 மாடுகளே நேற்று வரத்தானது. இதில், 80 சதவீத மாடுகள் விற்றன.