தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சித்தி விநாயகருக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்

சித்தி விநாயகருக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்

சித்தி விநாயகருக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்


ADDED : செப் 17, 2026 06:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 17, 2026 06:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு:விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து அமைப்புகள் மட்டுமின்றி தனியார் அமைப்புகள் சார்பிலும் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை நடத்தப்படுகிறது.

இன்று விநாயகர் சிலை ஊர்வலம் நடக்க உள்ளது. இந்நிலையில் வீரப்பன்சத்திரம் கலைவாணர் வீதியில், இந்து முன்னணி உதவியுடன் கிங் பாய்ஸ் நண்பர்கள், 14ம் ஆண்டாக விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகின்றனர். இங்கு 5 அடி உயர சித்தி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு, இரண்டு லட்சத்து, 40 ஆயிரம் ரூபாய் நோட்டுகளால் விநாயகர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தார்.இதுபற்றி, விழா ஏற்பாடு குழு தலைவர் துரைசாமி கூறியதாவது: 100, 200, 50, 20, 10 ரூபாய் புதிய நோட்டுகளை பயன்படுத்தி விநாயகரை அலங்கரித்துள்ளோம். பொதுமக்கள், பக்தர்கள், தெரிந்தவர்களிடம் இருந்து மட்டுமே புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றோம். சிசிடிவி கேமராக்களை அமைத்துள்ளோம். ரூபாய் நோட்டு அலங்காரம் கலைத்த பின், புதிய ரூபாய் நோட்டுகளை யாரிடம் வாங்கினோமோ அவர்களிடமே மீண்டும் கொடுத்து விடுவோம். இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us