ADDED : செப் 17, 2026 06:41 AM
கோபி:டாஸ்மாக் கடையில் தொழிலாளியை தாக்கியதாக, ஆறு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
கோபி
அருகே நல்லகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் மோகன சுந்தரம், 45,
கூலித்தொழிலாளி; இவர் கடந்த, 14ம் தேதி மதியம்,
நஞ்சகவுண்டன்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்த சரக்கு
வாகனத்தில் இருந்து, மதுபாட்டில் பெட்டியை இறக்கி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு சூர்யா, 35, என்பவர் மது போதையில் இடையூராக குறுக்கே
நடந்து சென்றார். அதை தட்டிக்கேட்ட மோகனசுந்தரத்தை, சூர்யா உட்பட
ஆறு பேர் தகாத வார்த்தையால் பேசி, பீர் பாட்டிலில் தாக்கி, கொலை
மிரட்டல் விடுத்து சென்றனர். இதனால் காயமடைந்த மோகனசுந்தரம், கோபி
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து
மோகனசுந்தரம் கொடுத்த புகாரின்படி, சூர்யா உட்பட ஆறு பேர் மீது
கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
