கரும்பை வெட்டாமல் தாமதம்: சர்க்கரை ஆலை மீது புகார்
கரும்பை வெட்டாமல் தாமதம்: சர்க்கரை ஆலை மீது புகார்
ADDED : செப் 20, 2026 06:55 AM
ஈரோடு:கீழ்பவானி
முறை நீர்ப்பாசன விவசாயிகள் சபை தலைவர் சோமசுந்தரம், ஈரோடு
கலெக்டர் கந்தசாமியிடம் மனு வழங்கி கூறியதாவது:
ஈரோடு மாவட்டம்
சிவகிரியில் வசிக்கிறேன். நான் எட்டு ஏக்கரிலும், என்னை போன்ற பல
விவசாயிகள், பல ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்துள்ளோம். பல ஆண்டாக
இப்பகுதியில் உள்ளவர்கள், புகழுர் சர்க்கரை ஆலைக்கு கரும்பு
வழங்குகிறோம். அவர்களே வெட்டுக்கான ஆட்கள், லாரி வழங்கி அறுவடை
செய்து கொள்வார்கள்.
நடப்பாண்டு ஆலையை தாமதமாக இயக்க
துவங்கியதால், சரியான நேரத்துக்கு வெட்டுக்கூலிக்கு ஆட்கள்
கிடைக்கவில்லை. மஹாராஷ்டிராவில் இருந்து ஆட்களை அழைத்து வந்து, வெட்ட
வைக்கின்றனர். பழைய ஆட்களை போல இவர்களுக்கு
வெட்டத்தெரியவில்லை. நாங்கள் விவசாயம் செய்து, 14 மாதங்கள் ஆகிய
கரும்பை ஆலை நிர்வாகம் வெட்டாமல் வைத்துள்ளனர். இதனால் காய்ந்து எடை
குறைகிறது. இதனால் பிழிதிறன் குறையும்போது தொகையும் குறையும். பயிர்
காய்வதாலும், வெட்டுவதில் சிரமம் உள்ளதால் மன உளைச்சல்
அடைந்துள்ளோம். இதுபற்றி மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, ஆலை நிர்வாகம்,
விவசாயிகள், அதிகாரிகள் கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி,
உரிய காலத்தில் கரும்பை வெட்டவும், வெட்டாமல் காயும் காலத்துக்கு
இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
