ADDED : அக் 29, 2026 03:20 AM
அ நிறம் | அளவு
பெருந்துறை: பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்-கத்தின் சார்பில், முதல்வர் விஜய்க்கு, அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பெருந்துறை சிப்காட் தொழில் வளர்ச்சி மையத்திற்காக, அரசால் கையகப்படுத்தப்பட்ட, 200 ஏக்கர் நிலங்களுக்கு, 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் உரிய இழப்பீடு கிடைக்கவில்லை. இதனால் நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் கடுமை-யாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், அரசே இழப்பீட்டு தொகையை, மறு நிர்ணயம் செய்து அரசா-ணையாக வெளியிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவ-ருக்கும் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்-டுள்ளது.
