/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெருந்துறை சிப்காட் ஆலைகளில் எரிவாயுவை பயன்படுத்த கோரிக்கை
/
பெருந்துறை சிப்காட் ஆலைகளில் எரிவாயுவை பயன்படுத்த கோரிக்கை
பெருந்துறை சிப்காட் ஆலைகளில் எரிவாயுவை பயன்படுத்த கோரிக்கை
பெருந்துறை சிப்காட் ஆலைகளில் எரிவாயுவை பயன்படுத்த கோரிக்கை
ADDED : மார் 06, 2024 06:27 AM
பெருந்துறை : மாசு தடுப்பு தொடர்பான மாதாந்திர கலந்தாய்வு கூட்டம், பெருந்துறை, சிப்காட்டில் உள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
மாசு கட்டுப்பாடு வாரிய இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வனஜா, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் ராஜ்குமார், ஜோதி பிரகாஷ், சிப்காட் உதவி பொறியாளர் சுஜா பிரியதர்ஷினி கலந்து கொண்டனர். பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்கத்தின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி உட்பட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர். கடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட பிரச்னைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் எடுத்துரைத்தார்.
கூட்டத்தில் பொதுமக்கள் தரப்பில் பேசியதாவது: சிப்காட் தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய மாசு கட்டுப்பாடு வாரியத்தால், ஏற்கனவே அமைக்கப்பட்ட தலா மூன்று பேர் கொண்ட, 10 ஆய்வு குழுக்களின் ஆய்வறிக்கை அடிப்படையில், எடுக்கப்பட்ட நடவடிக்கையை வெளியிட வேண்டும்.காற்று மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொதிகலன்களை எரிக்க விறகு மற்றும் நிலக்கரி பயன்படுத்துவதை கைவிட்டு, எரிவாயுவை ஆலைகள் பயன்படுத்த வேண்டும். சிப்காட் தொழிற்சாலைகள் உள்ளும், சிப்காட் வளாகத்துக்குள்ளும் சட்ட விரோதமாக தங்க வைக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான கேம்ப் கூலி தொழிலாளர்களை வெளியேற்ற வேண்டும். இவ்வாறு பேசினர்.

