ADDED : ஜூன் 09, 2026 01:51 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், மாவட்ட துணை செயலர் கலாமணி தலைமையில், ஈரோடு, காந்திஜி சாலை, ஜவான்ஸ் பவன் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட செயலர் அருந்ததி, மூத்த நிர்வாகி பிர-சன்னா, கீதா உட்பட பலர் பேசினர்.
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்கு-தலை காரணம் கூறி பெட்ரோல், டீசல், வீட்டு உபயோகம் மற்றும் வணிக உபயோக காஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதனால் அனைத்து வகை-யான விலை, உணவு பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளது. இவற்றை கட்டுப்ப-டுத்த நடவடிக்கை எடுப்பதுடன், பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை திரும்ப பெற வலியு-றுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
