/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரக்க முகமூடி அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்
/
அரக்க முகமூடி அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 19, 2025 03:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடுஈரோடு, மூலப்பாளையம், நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன், தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில், அரக்க முகமூடி அணிந்து நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாவட்ட தலைவர் செங்கோட்டையன் தலைமை வகித்தார். சாலை பணியாளர்களின் போராட்ட காலமான, 41 மாத காலத்தை பணிக்காலமாக ஏற்க வேண்டும். இதை வலியுறுத்தி சென்னையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற சாலை பணியாளர்களை கைது செய்ததை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
* கோபி கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன், கோட்டத்தலைவர் முருகவேல் தலைமையில், சாலைப்பணியாளர்கள், அரக்க முகமூடி அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

