/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இ.கம்யூ., கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்
/
இ.கம்யூ., கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்
இ.கம்யூ., கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்
இ.கம்யூ., கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 09, 2024 10:40 AM
கோபி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை, இயற்கை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மாநில அரசு கோரிய, 21 ஆயிரம் கோடியை, மத்திய அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கோபி ஒன்றியம் சார்பில், மொடச்சூர் சாலையில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய செயலாளர் கனகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர்கள் பரமேஸ்வரன், கிருஷ்ணகுமார்
பேசினர்.
இதேபோல் அந்தியூர் தாலுகா அலுவலகம் முன்பும், பர்கூரிலும், இ.கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
* ஈரோடு, சூரம்பட்டி நான்கு ரோட்டில், இ.கம்யூ., வட்டார செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் பிரபாகரன், கோரிக்கை குறித்து பேசினார். மாவட்ட பொருளாளர் ரமணி, வட்டார துணை செயலாளர் கல்யாணசுந்தரம் உட்பட பலர்
பங்கேற்றனர்.
* முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரம் தலைமையில், சத்தியமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் இ.கம்யூ., மாவட்ட செயலாளர் மோகன்குமார், சந்திரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சத்தி, பவானிசாகர், புளியம்பட்டி, கடம்பூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
* பவானி புது பஸ் ஸ்டாண்ட் அருகில், ஒன்றிய செயலாளர் அருள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கம்யூ., மாநிலக்குழு உறுப்பினர் மாதேஸ்வரன், நகர செயலாளர் பாலமுருகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் தங்கராஜ், கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.