/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வருமான வரித்துறை ஊழியர் ஆர்ப்பாட்டம்
/
வருமான வரித்துறை ஊழியர் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 17, 2024 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : ஈரோட்டில் வருமான வரித்துறை அலுவலகம் முன், வருமான வரித்துறை அலுவலர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தேசிய அளவில் நேற்று பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் அனைத்து மத்திய தொழிற்சங்கத்தினர், ஐக்கிய விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக கிளை தலைவர் கட்டூரி அபிேஷக் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். சரக செயலாளர் மேபிள், கோரிக்கை குறித்து பேசினார்.புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை அமலாக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.