ADDED : அக் 17, 2024 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு, அக். 17-
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மற்றும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் சார்பில், ஈரோடு தாலுகா அலுவலகத்தில், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. கிராம நிர்வாக அலுவலர் சங்க ஈரோடு வட்ட தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். பொருளாளர் கார்த்திகேயன், மாநில பொறுப்பாளர் சுரேஷ், மாவட்ட செயலாளர் ஜான் பேசினர். நாமக்கல் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய நபரை கைது செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர்.