அவுட் சோர்சிங் முறையை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
அவுட் சோர்சிங் முறையை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 21, 2026 04:24 AM
ஈரோடு:ஈரோடு
வீரப்பன்சத்திரத்தில், மாவட்ட உள்ளாட்சி துறை பணியாளர் சங்கம் -
ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் மாவட்ட செயலர் மணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம்
செய்தனர்.
மாநில செயலர் சின்னசாமி, மாவட்ட பொதுச் செயலர் சந்திரசேகரன்,
மாவட்ட துணைத் தலைவர் செல்வம் உட்பட பலர் பேசினர். அனைத்து பகுதி அரசு
பணிகளையும், அவுட் சோர்சிங் முறையில் சி.எம்.சி.எல்., மூலம் நியமனம்
செய்யும், அரசாணை-225ஐ உடன் ரத்து செய்ய வேண்டும். தேர்தல்
வாக்குறுதிப்படி அனைத்து ஒப்பந்த துாய்மை பணியாளர்களையும் உடன்
நிரந்தரம் செய்ய வேண்டும். நகராட்சியில் நேரடி ஒப்பந்த முறை ரத்து,
உள்ளாட்சி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம்
நிர்ணயிக்கப்பட்டு, 9 ஆண்டுகளுக்கு மேலாகியும் விலைவாசி
உயர்வுக்கு ஏற்ப குறைந்தபட்ச ஊதியம் மாதம், 42,000 ரூபாயாக
நிர்ணயித்து வழங்க வேண்டும்.
மாநில அளவில், 21 மாநகராட்சிகளில் பழைய ஒப்பந்த முறையே தொடரும் என்றும், ஏழு ஆண்டுகளுக்கு
ஒப்பந்தம் என்பதையும் ரத்து செய்ய வேண்டும். நிர்வாகம் நேரடியாக
ஊதியம் வழங்க வேண்டும். வேலைப்பளு, வேலை நிர்ணயம், மக்கள் தொகை
அடிப்படை, தொழிலாளர் எண்ணிக்கை பற்றி அரசு தொழிற்சங்கங்களுடன்
பேசி இறுதி செய்ய வேண்டும் என, வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
