ADDED : செப் 02, 2026 06:37 AM
ஈரோடு:ஈரோடு, ஈ.வி.என்., சாலையில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு - சி.ஐ.டி.யு., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட துணை தலைவர் சீதப்பன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சுரேஷ்பாபு, கிளை செயலர் ஸ்ரீதேவி, கிளை தலைவர் ஜோதிமணி, மாரப்பன், ஏழுமலை உட்பட பலர் பேசினர். பொதுமக்களின் நலனுக்காக மின்துறையை பொதுத்துறையாக பாதுகாக்க வேண்டும். மின் வினியோகம், மின் உற்பத்தி தொடரமைப்பில் தனியார் மய அறிவிப்பை கைவிட வேண்டும்.
மின்வாரிய பணியாளர்களின் வேலையை பறித்து தனியார் மயப்படுத்தும் ஸ்மார்ட் மீட்டர் 'டோடெக்ஸ்' திட்டத்தை கைவிட்டு, கேரளா அரசு அமல்படுத்தும் 'கேபெக்ஸ்' திட்டமாக மாற்ற வேண்டும்.
கணக்கீட்டாளர் 'டேபிள் ரீடிங்' போடுவதால் மின் கட்டணம் அதிகமாக வருவதாக மின்துறை அமைச்சர் கூறி, கணக்கீட்டாளர் பணியை அவதுாறாக பேசியதை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
