/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தே.மு.தி.க., சார்பில் ஆர்ப்பாட்டம்
/
தே.மு.தி.க., சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 07, 2025 01:24 AM
தே.மு.தி.க., சார்பில் ஆர்ப்பாட்டம்
ஈரோடு, பெண்கள், மாணவிகளுக்கு தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பை வலியுறுத்தியும், பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கவும், மழையால் பாதிக்கப்பட்ட மக்கள், விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, தே.மு.தி.க., சார்பில் ஈரோடு கருங்கல்பாளையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் ஆனந்த் தலைமை வகித்தார். கருங்கல்பாளையம் செயலாளர் ஆறுமுகம், பி.பெ.அக்ரஹாரம் செயலாளர் பெருமாள், 40வது வட்ட செயலாளர் கோவிந்தராஜ்லு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.
* அம்மாபேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தே.மு.தி.க., பேரூர் செயலாளர் முருகன், மாநில செயற்குழு உறுப்பினர் நல்லசாமி, அவைத் தலைவர் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.