ADDED : செப் 24, 2026 06:34 AM
அ நிறம் | அளவு
கோபி,:தமிழ்நாடு
மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், கோபி அருகே
வேட்டைக்காரன் கோவிலில் உள்ள, மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோபி தலைவர் பாலசுந்தரம் தலைமை
வகித்தார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிரந்தர
பணியாளர்களுக்கு சம்பள பொருத்தம் செய்து, ஓய்வூதியர்களுக்கும்
வழங்க வேண்டும். 75 வயது முடிந்தவர்களுக்கு, 15 சதவீதம் கூடுதல்
ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
