கஸ்தூரி அரங்கநாதர் கோவில் தேரோட்டம் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
கஸ்தூரி அரங்கநாதர் கோவில் தேரோட்டம் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
ADDED : செப் 24, 2026 06:33 AM
ஈரோடு:ஈரோடு கோட்டை பகுதியில்
உள்ள, கஸ்துாரி அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா கடந்த, 16ம் தேதி
துவங்கியது. தினமும் யாகசாலை பூஜை, திருமஞ்சனம் மற்றும் வாகனத்தில்
சுவாமி புறப்பாடு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. விழாவின்
முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது.
காலை
4:30 மணிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. அதன்பின் கோவில் முன்
தயார்நிலையில் இருந்த, அலங்கரிக்கப்பட்ட தேரில் கஸ்துாரி
அரங்கநாதர் எழுந்தருளினார். இதையடுத்து திரளான பக்தர்கள்
'கோவிந்தா, கோவிந்தா' என கோஷமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பூங்கா,
மீனாட்சி சுந்தரனார் சாலை, காமராஜர் வீதி வழியாக சென்று, மீண்டும்
கோவிலில் வந்தடைந்தது.
ஊர்வலத்தின் போது தம்பதி சமேதராக
பெருமாள் வேடமணிந்து வந்தவருடன், பக்தர்கள் செல்பி எடுத்து
மகிழ்ந்தனர். தேர் செல்லும் பாதைகளில் மின் நிறுத்தமும்,
போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது.
இன்று காலை 6:30
மணிக்கு யாகசாலை பூஜை, திருமஞ்சனம், மாலை 6:30 மணிக்கு சுவாமி குதிரை
வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது. 25 மாலை 6:30 மணிக்கு தெப்ப உற்சவம்
நடக்கிறது. நிறைவு நாளான, 26ம் தேதி காலை 6:30 மணிக்கு யாகசாலை பூஜை,
திருமஞ்சனம், தீர்த்தவாரி நடக்கிறது. மாலை 6:30 மணிக்கு
ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றுதலுடன் விழா நிறைவடைகிறது.
