/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மொடக்குறிச்சி பகுதியில் டெங்கு பரவல்; கிராமத்தில் முகாமிட்ட சுகாதாரத்துறை

ADDED : டிச 06, 2024 07:44 AM
ஈரோடு: பருவ மழைக்காலமாக உள்ளதால், மொடக்குறிச்சி பகுதியில் டெங்கு பாதிப்பு அறியப்பட்டு, கிராமங்களில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு சுகாதாரப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சாதாரண காலங்களில் ஓரிரு எண்ணிக்கையில் டெங்கு பாதிப்பு ஏற்படுவது வழக்கம். பருவமழை காலங்களில், தண்ணீர் தேங்கியும், டெங்கு கொசுக்கள் உற்பத்தி அதிகரித்தும் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டாலும், சில நபர்கள் டெங்குவால் பாதிக்கின்றனர்.
கடந்த சில நாட்களாக ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மொடக்குறிச்சி தாலுகா காட்டுப்பாளையம் பகுதியில் டெங்கு பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டு, மொடக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலைய கட்டுப்பாட்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு அங்கு சிகிச்சை வழங்க போதிய வசதி இல்லை என்பதால், ஈரோடு அரசு மருத்துவமனை அல்லது வேறு மருத்துவமனைகளுக்கு செல்ல பரிந்துரைத்தனர். இதற்கிடையில் நேற்று சுகாதாரத்துறையினர், காட்டுப்பாளையம் பகுதியில் முகாமிட்டு, கிராம மக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் பாதிப்புகளை கண்டறிந்தும், கொசு மருந்து தெளித்தும், தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ளும்படி ஆய்வுப்பணியும் மேற்கொண்டனர்.