/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
துணை முதல்வர் உதயநிதி இன்று ஈரோடு வருகை
/
துணை முதல்வர் உதயநிதி இன்று ஈரோடு வருகை
ADDED : டிச 30, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: சித்தோடு அரசினர் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் இன்று மதியம், 12:00 மணிக்கு துணை முதல்வர் உதயநிதி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சி நடக்கிறது.
கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில், நகர்புற இளைஞர்களுக்கும் உபகரணம் வழங்கப்படுகிறது. இதன்-படி மாவட்டத்தில் மாநகராட்சி, ஐந்து நகராட்சிகள், 41 டவுன் பஞ்., இளைஞர்களுக்கு இவ்விழாவில் வழங்கப்படுகிறது. தவிர மக்களுக்கும் நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது. விழாவில் அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், கயல்விழி, எம்.பி.,க்கள் பிரகாஷ், அந்தியூர் செல்வராஜ் மற்றும் பலர் பங்கேற்க உள்ளனர்.

