/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானி நகராட்சியை கண்டித்து துணை தலைவர் போராட்டம் குடியரசு தினவிழாவில் களேபரம்

ADDED : ஜன 27, 2024 04:41 AM
பவானி: பவானி நகராட்சி அலுவலகத்தில், குடியரசு தினவிழா தலைவர் சிந்துாரி தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.
இதில் பங்கேற்க வந்த தி.மு.க., கூட்டணியை சேர்ந்த துணைத் தலைவர் மணி 'கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள், துணைத் தலைவரான தன்னை, நகராட்சி சார்பில் நடக்கும் விழாக்களுக்கு முறையாக அழைப்பு விடுப்பதில்லை. நகராட்சி நிர்வாகம் அவமதிக்கிறது' என்று கூறி, அலுவலக நுழைவாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவரிடம் பேசிய கமிஷனர், ''வரும் நாட்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும். நகராட்சி தலைவர் உத்தரவுப்படியே செயல்படுகிறேன். துணைத்தலைவர், கவுன்சிலர்களை அரசு விழாவுக்கு அழைப்பதில், தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை,'' என்றார். அதன்பின் மணி அங்கிருந்து சென்றார். இந்த களேபரத்தால், ௨௦ நிமிடம் தாமதமாக, குடியரசு தினவிழா தொடங்கி நடந்தது.