/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தொடர் விடுமுறை எதிரொலி வெறிச்சோடிய சாலைகள்
/
தொடர் விடுமுறை எதிரொலி வெறிச்சோடிய சாலைகள்
ADDED : ஆக 16, 2025 01:42 AM
ஈரோடு, ஈரோடு மாநகரின், முக்கிய பிரதான சாலைகள் எப்போதும் போக்குவரத்து நிறைந்து பரபரப்பாகவே காட்சியளிக்கும். இந்நிலையில் நேற்று சுதந்திர தினம், இன்று கோகுலாஷ்டமி, நாளை ஞாயிற்றுக் கிழமை என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வந்துள்ளது. இதனால், நேற்று முன்தினமே பொதுமக்கள் வெளியூர்களுக்கு படையெடுத்து சென்றனர். இதனால் மாநகரின் முக்கிய சாலைகளான மேட்டூர் ரோடு, சத்தி ரோடு, பெருந்துறை ரோடு, மீனாட்சி சுந்தரனார் சாலை, காந்திஜி சாலை மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
அதேபோல் ஜவுளி கடைகள், மொத்த விற்பனை கடைகள் போன்றவை நிறைந்த பகுதிகளான மணிக்கூண்டு, ஆர்.கே.வி ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி ஆகிய இடங்களிலும் சொற்ப அளவிலான மக்கள் கூட்டமே இருந்தது. இதேபோல், ஜூவல்லரி கடைகளிலும் குறைந்த அளவிலான வாடிக்கையாளர்களே வந்திருந்தனர். எப்போதுமே பரபரப்பாக இருக்கக்கூடிய கனி மார்க்கெட் வளாகத்திலும், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வருகையின்றி
பொலிவிழந்து காணப்பட்டது.