/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கிராமப்புற மக்களுக்கான வளர்ச்சி கலந்துரையாடல்
/
கிராமப்புற மக்களுக்கான வளர்ச்சி கலந்துரையாடல்
ADDED : செப் 07, 2025 01:15 AM
காங்கேயம், விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களுக்கான, அன்றாடம் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களை சமாளித்து மன நிம்மதி மன மகிழ்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான யுக்திகளை கற்றுக் கொள்ளும் பயிற்சி, காங்கேயத்தில் காங்கேயம் ஹார்ட் புல்னெஸ் நிறுவனத்தில் நடந்தது. மைய ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வரவேற்றார்.
காங்கேயம் உழவர் அமைப்பு நிர்வாகி குமாரசாமி வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு மாநில பொறுப்பாளர் பிரகாஷ் சிறப்புரை ஆற்றினார். விவசாய நிலங்களில் மண்ணின் தரத்தை மேம்படுத்துவது, குறைவான நீரில் அதிக விவசாயம் செய்வது குறித்து செயல் விளக்கம் அளித்தனர். நிகழ்வில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கெண்டனர்.