/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு பஸ் ஸ்டாண்டில் மேம்பாட்டு பணி சுணக்கம் வட மாநில தொழிலாளர் பற்றாக்குறையால் பரிதாபம்

ADDED : ஜூன் 15, 2024 07:24 AM
ஈரோடு : ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்டில் வணிக வளாக கட்டடம், பஸ் ரேக்குகள், துாண்கள் இடிந்து விழும் நிலைக்கு சென்றன. இதனால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், 45.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, 2021ல் மேம்பாட்டு பணி தொடங்கியது.
இதன்படி பஸ் ரேக்குகள், வாகன நிறுத்தத்துடன் கூடிய வணிக வளாகங்கள், மின்சார பஸ்கள் நிற்க கூடுதல் ரேக்குகள், புதிய வணிக வளாகங்கள், டூவீலர்கள் நிறுத்தும் இடம் உள்ளிட்ட பணி மேற்கொள்ளப்படுகிறது.
பணிகள் அனைத்தும் பகுதி, பகுதியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த, 2023 ஏப்., மாதமே முடிக்க திட்டமிட்டிருந்த பணிகள், தற்போது வரை முடிக்கப்படவில்லை. சொந்த ஊருக்கு சென்ற வடமாநில தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பாததே காரணம் என்று, மாநகராட்சி நிர்வாகம் கூறுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய பஸ் ஸ்டாண்ட் மேம்பாட்டு பணியை, 2023 ஏப்., இறுதியில் முடிக்க திட்டமிட்டிருந்தோம். வடமாநிலத்தவர் மீது சிலர் தாக்குதல் நடத்துவதாக பரவிய வதந்தியால், பணியில் ஈடுபட்டிருந்த, 20க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர் சொந்த ஊருக்கு சென்றனர். சில மாதங்கள் கழித்து, ஒரு சிலரே திரும்பினர். இதை தொடர்ந்து லோக்சபா தேர்தலுக்கு சொந்த ஊருக்கு சென்ற தொழிலாளர்கள் இதுவரை ஊர் திரும்பவில்லை. ஒரு சிலர் மட்டுமே பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவே பணி முடங்கியதற்கு காரணம். இவ்வாறு கூறினர்.