/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொங்காலம்மன் கோவில் வீதியில் மேம்பாட்டு பணிகளால் சிக்கல்
/
கொங்காலம்மன் கோவில் வீதியில் மேம்பாட்டு பணிகளால் சிக்கல்
கொங்காலம்மன் கோவில் வீதியில் மேம்பாட்டு பணிகளால் சிக்கல்
கொங்காலம்மன் கோவில் வீதியில் மேம்பாட்டு பணிகளால் சிக்கல்
ADDED : ஆக 29, 2025 01:13 AM
ஈரோடு :ஈரோடு மணிக்கூண்டு அருகில் கொங்காலம்மன் கோவில் வீதியில், மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் அதிகம் செயல்படுகின்றன. இப்பகுதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், வியாபாரிகள் வந்து செல்கின்றனர்.
இதனால் இப்பகுதி எப்போதும் கூட்டம் நிறைந்து பரபரப்பாக இருக்கும். இந்நிலையில் கொங்கலம்மன் கோவில் எதிரில் உள்ள சாக்கடையை அகலப்படுத்தி, தரைப்பாலம் கட்டும் பணி மாநகராட்சி சார்பில் நடக்கிறது. இதற்காக பாதைகளை அடைத்து, போக்குவரத்துக்கும் தடை விதித்துள்ளனர்.
கடந்த, 10 நாட்களாக பணி நடக்கிறது. இதனால் வியாபாரிகள், மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். பெரிய அளவில் வியாபாரம் நடக்கும் இடத்தில் கூட, வழக்கமான பாணியில் வேலை செய்தால் எப்படி? என்றும், மக்கள் தரப்பில் கேள்வி எழுந்துள்ளது.