/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விநாயகருக்கு வாழைத்தார் நேர்ச்சை வணங்கிய பக்தர்கள் ருசி பார்த்தனர்!

ADDED : ஜன 21, 2025 06:47 AM
கோபி: கோபி அருகே பாரியூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்துக்காளி-யம்மன் கோவிலில், ராஜகோபுரத்தை கடக்கும் பக்தர்கள், மேற்கு வாயிலில் நுழைந்ததும், அங்குள்ள பைப்புகளில் கை, கால், முகம் கழுவி விட்டு, வன்னிமரத்தடியில்
வீற்றிருக்கும் விநாயகரை வழிபட்ட பிறகே கோவிலுக்கு செல்வர். இந்த வன்னி விநாயகர் கோவில் பந்தலில், வாழை விவசாயி ஒருவர் நேர்த்திக்கடனாக, பூவன் வாழைத்தார் ஒன்றை கட்டி நேற்று தொங்க விட்டிருந்தார்.
விநாயகரை சுற்றி வந்த பக்தர்கள், வாழைப்பழத்தை பிரசாதமாக கருதி பறித்து ருசித்தனர். இதுகு-றித்து அறநிலையத்துறையினர் கூறுகையில், 'இதுவரை யாரும் இதுபோல் செய்ததில்லை. நேர்ச்சையாக இதுவே முதல் முறை
என்பதால் ஆச்சர்யமாக உள்ளது' என்றனர்.