/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குடியிருப்பு வழங்க கோரி கலெக்டர் ஆபீஸில் தர்ணா
/
குடியிருப்பு வழங்க கோரி கலெக்டர் ஆபீஸில் தர்ணா
ADDED : பிப் 13, 2024 12:02 PM
ஈரோடு: ஈரோடு, வெட்டுக்காட்டு வலசு, வாஞ்சிநாதன் நகர், போஸ்டல் நகரை சேர்ந்த மக்கள், காலி இடம் அல்லது குடியிருப்பு வழங்க கோரி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் றியதாவது: வாஞ்சிநாதன் நகரில், 60 ஆண்டாக வசித்தோம். அப்பகுதி நீர் நிலை புறம்போக்கு எனக்கூறி, 2007 முதல் எங்களை காலி செய்யும்படி கூறினர். அங்கு, 106 குடும்பத்தினர் உள்பட வேறு சிலரும் வசித்தனர். காலி செய்ய வைத்து, அவ்விடத்தில் கம்பி வேலி அமைத்தனர். இதனால், 106 குடும்பத்தை சேர்ந்த நாங்கள், அதே பகுதியில் வாடகை வீடு எடுத்து வசித்து, கூலி வேலை செய்து வருகிறோம். எங்களுடன் வசித்த சிலருக்கு லக்காபுரம் உட்பட சில இடங்களில் குடியிருப்பு வழங்கியுள்ளனர். எங்களுக்கு அதே இடத்தில் அல்லது அருகே காலியிடம் அல்லது குடியிருப்பு வழங்க வலியுறுத்தி வருகிறோம். இதுவரை இடம் வழங்கப்படவில்லை. விரைவில் நிலம் அல்லது குடியிருப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர்.