ADDED : அக் 27, 2024 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாநகரில் டி.ஐ.ஜி., ஆய்வு
ஈரோடு, அக். 27-
ஈரோடு எஸ்.பி,. அலுவலகத்தில், டி.ஐ.ஜி., சரவணசுந்தர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், ஈரோடு மாநகர கடை வீதியில் மக்கள், வணிகர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போலீசாரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டார். சிசிடிவி கேமராக்கள், இரண்டு டிரோன்கள் மூலம் மாநகரில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. டிரோன் இயக்கத்தை டி.ஐ.ஜி., ஆய்வு செய்தார்.
அவருடன் எஸ்.பி., ஜவகர்
உள்ளிட்டோர் உடனிருந்தனர்.