/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயம் ஸ்டேஷனில் 6 மணிநேரம் ஆய்வு நடத்திய டி.ஐ.ஜி., பணியில் மெத்தனம்; அடுக்கடுக்கான குற்றச்சாட்டால் அதிரடி

ADDED : ஏப் 13, 2025 04:18 AM
காங்கேயம்: கோவை சரக டி.ஐ.ஜி., சசிமோகன், காங்கேயம் டி.எஸ்.பி., அலு-வலகம் மற்றும் காங்கேயம் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ஆவணங்கள், பதிவேடுகள் மற்றும் குற்ற வழக்கு கோப்புகளை ஆய்வு செய்தார். போலீசாருக்கு உரிய அறிவுரை, ஆலோசனை வழங்கினார். காங்கேயம் போலீஸ் ஸ்டேஷனில் மட்டும், ௬ மணி நேரம் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது திருப்பூர் எஸ்.பி., கிரிஷ் யாதவ், டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நீண்ட ஆய்வு ஏன்?
படியூர் அருகே வாகன ஓட்டிகளிடம் ஜி-பே மூலம் லஞ்சம் பெற்ற காங்கேயம் போலீசார், சமீபத்தில் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். மேலும் அயல்பணி பெயரில் ஒரே ஸ்டேஷனில் எட்டு ஆண்டுகள் பணிபுரிந்த இருவர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
போலீஸ் வாகனத்தை நண்பருக்கு ஓசி கொடுத்த ஒரு கான்ஸ்-டபிள் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அதிகாரிக்கு தவறான தகவல் கொடுத்த எஸ்.பி., ஏட்டு மாற்றம்; வாக்கிடாக்கியை பணியின்போது மறந்து சென்ற எஸ்.ஐ.,; கந்து-வட்டி புகாரில் காங்கேயம் போலீசார் ஒருதலைபட்சமாக செயல்ப-டுவதாக வந்த புகார் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களே, காங்கேயம் போலீஸ் ஸ்டேஷனில், ௬ மணி நேரம் டி.ஐ.ஜி., விசாரணை நடத்த காரணம் என்று போலீசார் தெரிவித்தனர்.