/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாலையில் தோண்டிய குழி தொழிலாளி பரிதாப பலி
/
சாலையில் தோண்டிய குழி தொழிலாளி பரிதாப பலி
ADDED : மே 08, 2024 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி:கோபி
அருகே அளுக்குளியை சேர்ந்தவர் அம்மாசை, 52, பந்தல் போடும் கூலி
தொழிலாளி; நேற்று காலை சத்தி சாலையில் மூலவாய்க்கால் என்ற இடத்தில்
டி.வி.எஸ்., 50 மொபட்டில் சென்றார்.
அந்த இடத்தில் நெடுஞ்சாலைத்துறை
தோண்டியிருந்த குழிக்குள் மொபட்டுடன் விழுந்தார். பேச்சு,
மூச்சின்றி கிடந்தவரை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு, கோபி அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர் பரிசோதனையில் அவர்
ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. விபத்தில் பலியான அம்மாசை
மனைவி தங்கம்மாள் புகாரின்படி, கடத்துார் போலீசார்
விசாரிக்கின்றனர்.

