/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆடிப்பண்டிகை நாளில் சூதாடிய 15 பேர் கைது
/
ஆடிப்பண்டிகை நாளில் சூதாடிய 15 பேர் கைது
ADDED : ஆக 05, 2011 01:59 AM
ஈரோடு: ஆடிப்பண்டிகை கொண்டாடத்தின் போது, பல்வேறு இடங்களில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை போலீஸார் அதிரடியாக கைதுசெய்தனர்.
தமிழகத்தில் நேற்று முன்தினம் ஆடிப்பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை, புளியம்பட்டி, அந்தியூர் ஆகிய இடங்களில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அம்மாபேட்டை, பெத்தக்காபாளையம் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட, பழனிச்சாமி (30), கிருஷ்ணமூர்த்தி (24), வெங்கடேஷ் (30), சரவணகுமார்(27) ஆகியோரை, அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன் கைதுசெய்தார். புளியம்பட்டி, புங்கம்பள்ளி சுடுகாட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ராமசாமி (43), துரைசாமி(55), முருகேசன் (47) மற்றும் சாணார்பதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட தரிமணி (49), தேவராஜ் (37), ரங்கசாமி (40) ஆகியோரை, இன்ஸ்பெக்டர் சுந்தரம் கைது செய்தார். அந்தியூர், செம்புளிச்சாம்பாளையம் கன்னிமார் கோவில் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட முஸ்தபா (40), பெருமாள் (54), முருகேசன் (39), பாண்டுரங்கன் (45), முனுசாமி (45) ஆகியோரை, அந்தியூர் போலீஸ் எஸ்.ஐ., அம்பிகா கைதுசெய்தார்.