/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நில மோசடி புகாரில் மேலும் இருவர் கைது
/
நில மோசடி புகாரில் மேலும் இருவர் கைது
ADDED : ஆக 05, 2011 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: நில மோசடி புகாரில் நேற்று மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
பெருந்துறையை சேர்ந்த ராமசாமி (75) தனது 6.60 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டதாக, ஈரோடு நிலமோசடி தடுப்பு பிரிவில், புகார் கொடுத்தார். முன்னாள் அமைச்சர் ராஜா உள்பட 12 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். நேற்று ஈரோடு மேயர் குமார் முருகேஷ், ராஜா உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து நேற்று மதியம் பெருந்துறையை சேர்ந்த மகேஷ் (22), தட்சிணாமூர்த்தி (48) ஆகியோர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.