/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரயில்வே ஸ்டேஷனில் ப்ளாட்பாரத்தில் கழிவு நீர்
/
ரயில்வே ஸ்டேஷனில் ப்ளாட்பாரத்தில் கழிவு நீர்
ADDED : ஆக 05, 2011 02:05 AM
ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் இரண்டாம் ப்ளாட்பார்மில் கழிப்பிட கழிவு நீர் ஓடுவதால், பயணிகள் வழுக்கி விழுகின்றனர்.
ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் நான்கு ப்ளாட்பார்ம்கள் உள்ளன. ஒன்று மற்றும் இரண்டாம் ப்ளாட்பார்மின் மாடியில், ரயில்வே நிர்வாகம் சார்பில், பயணிகள் ஓய்வறைகள் உள்ளன. ஒவ்வொரு அறையிலும் உள்ள கழிப்பிடத்தின் குழாய்கள் இணைக்கப்பட்டு, இரண்டாவது ப்ளாட்பார்ம் வழியே, தண்டவாளத்தில் கழிவுநீர் வெளியேற வழிவகை செய்யப்பட்டுள்ளது. குழாய்கள் பழுதடைந்து விரிசல் விழுந்துள்ளதால், பயணிகள் நடந்து செல்லும் ப்ளாட்பார்மிலேயே கழிவு நீர் வெளியேறி ஆறாக ஓடுகிறது. உடல் ஊனமுற்றோர், மாற்றுத்திறனாளிகள், வயதானோர் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். ஏற்கனவே ப்ளாட்பார்மில் டைல்ஸ் பதிக்கப்பட்டு, வழுவழுப்பாக உள்ளதால், பலரும் வழுக்கி விழுகின்றனர். சக்கரம் பொருத்திய சூட்கேஸ்களை இழுத்துச் செல்வோர், இந்த கழிவுநீர் வழியேதான் இழுத்து செல்ல வேண்டியுள்ளது. ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் ஒன்று மற்றும் இரண்டாம் ப்ளாட்பார்மில்தான், தொலைதூர ரயில்கள் நின்று செல்லும். நாள்தோறும் பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும். ஆனால், ஒரு மாதமாக உள்ள இப்பிரச்னையை சரி செய்ய ரயில்வே நிர்வாகம் முன்வரவில்லை.