sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சென்னிமலை சுப்பிரமணியருக்கு 300 குட பாலாபிஷேகம்

/

சென்னிமலை சுப்பிரமணியருக்கு 300 குட பாலாபிஷேகம்

சென்னிமலை சுப்பிரமணியருக்கு 300 குட பாலாபிஷேகம்

சென்னிமலை சுப்பிரமணியருக்கு 300 குட பாலாபிஷேகம்


ADDED : ஆக 08, 2011 03:19 AM

Google News

ADDED : ஆக 08, 2011 03:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: சென்னிமலை மலை மீது இருந்து அருள் பாலிக்கும் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கு 300 குடம் பாலாபிஷேக பெருவிழா நடந்தது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவில் மலை மீது அமைந்துள்ளது. இங்குள்ள முருகப்பெருமான் ஸ்ரீ சுப்பிரமணியர் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். இங்குதான் முருகப்பெருமான் திருபுகழை தந்த அருணகிரிநாதருக்கு படிக்காசு நல்கினார். புண்ணாக்கு சித்தர், செங்கந்துறை பூசாரி, வேட்டுவபாளையம் பூசாரி போன்ற முனிவர்களுக்கு திருக்கோல காட்சி தந்ததும், கந்தர் சஷ்டி கவசம் அரங்கேறியதும்,1,320 படிகள் வழியாக இரட்டை மாட்டு வண்டி மலையேறிய சிறப்புகள் கொண்டது சென்னிமலை முருகன் கோவில். இங்கு சுப்பிரமணியருக்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் விசாக நட்சத்திரத்தில் சென்னிமலை கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளர்கள் சங்கம் சார்பாக பாலாபிஷேக பெருவிழா நடத்தப்படும். 44வது ஆண்டாக இந்தாண்டு 300 குடம் பாலாபிஷேக விழா நேற்று நடந்தது. அதிகாலை 5.45 மணிக்கு 300 திருப்பாற்குடங்கள் உரிய சிறப்புடன் சென்னிமலை நகரில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து புறப்பட்டு மேளா தாளத்துடன் திருவீதி வலம் வந்து மலை கோவிலை சென்றடைந்தது. காலை 10.30 மணிக்கு மலை மேல் சுப்பிரமணியருக்கு பாலாபிஷேகம் தொடங்கி மதியம் 12.30 வரை நடந்தது. 1 மணிக்கு சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனையும், 2 மணிக்கு உற்சவ மூர்த்தி பிரகார உலாக்கட்சி நடந்தது. மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு மலை மீது அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளர்கள் சங்க தலைவர் முத்துசாமி, துணை தலைவர் ஈஸ்வர்மூர்த்தி ,செயலாளர் ராமலிங்கன், பொருளாளர் சாமிநாதன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் சங்க மேலாளர் காளிமுத்து ஆகியோர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us