/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு பயிற்சி பட்டறை
/
என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு பயிற்சி பட்டறை
ADDED : ஆக 08, 2011 03:19 AM
பெருந்துறை: சென்னை கிண்டி தொழில் கல்வி இயக்ககம், மாநில என்.எஸ்.எஸ்., மற்றும் பெருந்துறை, கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி சார்பில், மாநில அளவில் என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு ஒரு நாள் பேரிடர் மேலாண்மை பற்றிய பயிற்சி பட்டறை நடந்தது.
கல்லூரி தாளாளர் இளங்கோ தலைமை வகித்தார். முதல்வர் வேதகிரிஈஸ்வரன் வரவேற்றார். பெருந்துறை, கொங்கு இன்ஜினியரிங் காலேஜ் தாளாளர் விஸ்வநாதன், பயிற்சி பட்டறையை துவக்கி வைத்து பேசினார். 'நில நடுக்கம்' என்ற தலைப்பில் பெருந்துறை கொங்கு இன்ஜினயரிங் காலேஜ் உதவி பேராசிரியர் கோதை பேசினார். தீ பாதுகாப்பு மற்றும் மீட்பு' என்ற தலைப்பில் ஈரோடு மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அதிகாரி மதியழகன் பேசினார். 'வெள்ள பெருக்கு, சேதம் மற்றும் மீட்பு' என்ற தலைப்பில், பெருந்துறை கொங்கு இன்ஜினியரிங் காலேஜ் உதவி பேராசிரியர் ராஜ்குமார் பேசினார். 'விபத்து மற்றும் முதலுதவி' என்ற தலைப்பில் பெருந்துறை ரெட்கிராஸ் செயலாளர் ஜார்ஜ் பேசினார். பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி என்.எஸ்.எஸ்., அலுவலர் கோவிந்தராஜுலு நன்றி கூறினார். பயிற்சி பட்டறையில் மாநிலத்திலுள்ள 25 பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த 150 என்.எஸ்.எஸ்., மாணவர்கள் பங்கேற்றனர்.

