/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடு தீவிரம்
/
ஈரோட்டில் விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடு தீவிரம்
ADDED : ஆக 29, 2011 01:01 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட ஏற்பாடுகள் நடக்கின்றன.
மாவட்டத்தில் 1,008 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட இந்து முன்னணி ஏற்பாடுகள் செய்துள்ளது. வெட்டுக்காட்டு வலசு பகுதியில் விநாயகசிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. சென்னையிலிருந்து வந்த 15 பேர் குழுவினர், சிலை தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மூன்று முதல் 11 அடி வரையான பல அளவுகளில் சிலை தயாராகிறது. கோமாதா, அன்ன வாகனம், மயில் வாகனம், பீடம் ஆகியவற்றின் மீது விநாயகர் அமர்ந்துள்ள நிலையில் சிலைகள் தயாராகிறது. மூல விநாயகர் சிலை 11 அடி உயரத்தில் சம்பத் நகரில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. சிலைகள் தயாரிக்க ரசாயனம் பயன்படுத்தாமல், காகித கூழ், கிழங்கு மாவு கொண்டு தயாரிக்கப்படுவதால், தண்ணீரில் விரைவில் கரைந்துவிடும். சிறிய விநாயகர் சிலைகள் ரோட்டோரக் கடைகளில் விற்கப்படுகின்றன. பூம்புகார் விற்பனை நிலையத்தில் விநாயகர் சிலை கண்காட்சி துவக்கப்பட்டுள்ளது.