/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பண்டிகைகள் வரும் நிலையில் பாதுகாப்பு குறைவு
/
பண்டிகைகள் வரும் நிலையில் பாதுகாப்பு குறைவு
ADDED : ஆக 29, 2011 01:01 AM
ஈரோடு: நாடு முழுவதுமாக நாளை மறுநாள் முஸ்லீம்களின் ரம்ஜான் பண்டிகையையும்,
வியாழனன்று இந்துக்களின் விநாயகர் சதுர்த்தியும் கொண்டாடப்படுகிறது.
ஆண்டு
தோறும் வழங்கமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதங்கள்
ஏதும் ஏற்படாமல் இருக்க நாடு முழுவதுமாக பலத்த பாதுகாப்பு போடப்படுவது
வழக்கமாகும். விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட மாநிலம், மாவட்டந்தோறும்
கோவில்கள், வீடுகள், தெருக்கள் என அனைத்து இடங்களிலும் சிலைகள் பிரதிஷ்டை
செய்து வழிபட தயாராகி டென்ட்கள் அமைக்கப்பட்டுள்ளது. சிற்பக்கூடங்கள்
மற்றும் சிலை தயாரிப்பு இடங்களில் இருந்து, மண், பிளாஸ்டர் ஆப் பாரிஸ்
மூலம் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அரை அடி முதல் 10 வரையிலும்
தயாரிக்கப்பட்டு, நகரின் பல்வேறு இடங்களில் விற்பனைக்கு குவிந்துள்ளது.
முன்னதாக முஸ்லீம்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் நோக்கில் மசூதி,
பள்ளிவாசல், திருமண மண்டபங்களை வண்ண விளக்குகளால் அலங்கரித்து, ரம்ஜான்
நாளில், சிறப்பு தொழுகை நடத்த தயாராகி விட்டனர். விநாயகர் சதுர்த்தியை
ஒட்டி, அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, நாடு முழுவதும் கோவில்கள், பஸ்
ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், மருத்துவமனை மற்றும் மக்கள் கூடும் இடங்களில்
பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் செப்டம்பர்
9ம் தேதி, ராஜிவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாற்றப்பட்ட குற்றவாளிகள்
மூவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற உள்ளதால், உச்சகட்ட டென்ஷன்
ஏற்பட்டுள்ளது. ஆனால், ஈரோடு ஜங்ஷனில் வழக்கமாக முன்பக்கமாக மூன்று ரயில்வே
போலீஸார்கள் பணியில் இருப்பது வழக்கம். ஆனால், தற்போது விநாயகர்
சதுர்த்திக்காக அனைத்து இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ள
நிலையில், ஜங்ஷனில் வழங்கமான பாதுகாப்பு போலீஸார் கூட இல்லை. மேலும்,
வெடிபொருட்களை கண்டரியும் நுழைவாயிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு
கிடப்பில் போட்டு வைத்துள்ளனர். சாதாரண நாளில் பல போலீஸார் ரோந்து செல்லும்
இடங்களில் கூட, விழா நாள் விரைவில் வர உள்ள நிலையிலும் பாதுகாப்பு
பலப்படுத்தப்படாமல் இருப்பது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.