sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கூட்டுறவு ஊழியர்களுக்கு தபால் வழி பட்டயப் பயிற்சி

/

கூட்டுறவு ஊழியர்களுக்கு தபால் வழி பட்டயப் பயிற்சி

கூட்டுறவு ஊழியர்களுக்கு தபால் வழி பட்டயப் பயிற்சி

கூட்டுறவு ஊழியர்களுக்கு தபால் வழி பட்டயப் பயிற்சி


ADDED : செப் 06, 2011 01:45 AM

Google News

ADDED : செப் 06, 2011 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு தபால் வழியில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி வகுப்பு துவங்குகிறது.

கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் செந்தில்குமார் அறிக்கை: ஈரோடு முனிசிபல் காலனி, வேலுசாமி வீதியில் செயல்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டயப் பயிற்சி (டி.கோ ஆப்.,) அளிக்கப்படுகிறது. ஈரோடு மாவட்ட கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் வசதிக்காக, தபால் வழியில் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான சேர்க்கை நடந்து வருகிறது. கூட்டுறவு பட்டயப்பயிற்சி பெறாத கூட்டுறவு பணியாளர்கள் இப்பயிற்சியில் சேரலாம். 11ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, கூட்டுறவு சங்கங்களில் முறையான பணி நியமனம் பெற்றுள்ள அனைவரும் இப்பயிற்சியில் சேரலாம். பயிற்சிக் கட்டணம் 7,960 ரூபாய். மேலாண்மை நிலைய அலுவலகத்தில், விண்ணப்பத்தை பெற்று, பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் வரும் 23ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். 25ம் தேதி முதல் பயிற்சி துவங்கி, 50 வாரம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us