sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அக்., 10 முதல் "பூத் ஸ்லிப்' விநியோகம் துவக்கம்!வீடு வீடாக அதிகாரிகள் வழங்குவர்

/

அக்., 10 முதல் "பூத் ஸ்லிப்' விநியோகம் துவக்கம்!வீடு வீடாக அதிகாரிகள் வழங்குவர்

அக்., 10 முதல் "பூத் ஸ்லிப்' விநியோகம் துவக்கம்!வீடு வீடாக அதிகாரிகள் வழங்குவர்

அக்., 10 முதல் "பூத் ஸ்லிப்' விநியோகம் துவக்கம்!வீடு வீடாக அதிகாரிகள் வழங்குவர்


ADDED : அக் 08, 2011 01:31 AM

Google News

ADDED : அக் 08, 2011 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுப்போடும் வகையில், வீடுவீடாக சென்று வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணி அக்டோபர் 10ம் தேதி துவங்குகிறது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் 22ம் தேதி துவங்கி, அக்டோபர் 3ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல், சின்னத்துடன் வெளியிடப்பட்டது. 17 மற்றும் 19ம் தேதிகளில் தேர்தலும், 21ம் தேதி ஓட்டு எண்ணிக்கையும் நடக்கிறது. ஒரு மாநகராட்சி மேயர், 60 மாநகராட்சி கவுன்சிலர், 19 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர், 183 யூனியன் கவுன்சிலர், 225 பஞ்சாயத்து தலைவர், 2,093 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், நான்கு நகராட்சி தலைவர், 102 நகராட்சி கவுன்சிலர்கள், 42 டவுன் பஞ்சாயத்து தலைவர், 630 டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர்கள் என 3,363 உள்ளாட்சி பதவிகள் உள்ளன. இதில், 418 பதவிகளுக்கு போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 2,945 பதவிகளுக்கு, 11 ஆயிரத்து 553 பேர் போட்டியிடுகின்றனர். மாவட்ட அளவில் ஏழு லட்சத்து 51 ஆயிரத்து 123 ஆண், ஏழு லட்சத்து 39 ஆயிரத்து 526 பெண், 47 திருநங்கைகள் என 14 லட்சத்து 90 ஆயிரத்து 696 வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் உள்ளது. சிலருக்கு புகைப்படம் இன்றி வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளது. அனைத்து வாக்காளர்களும், ஓட்டுப்போடும் வகையில் அவர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் மூலம் பூத் ஸ்லிப் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது. வாக்காளர்கள், ஓட்டுச்சாவடியில் உள்ள பணி அலுவலர், அனைத்து வேட்பாளர்கள், பூத்தில் உள்ள முகவர்களுக்கு வழங்கும் வகையில் தேவையான எண்ணிக்கையில் வாக்காளர் பட்டியல் பிரின்ட் செய்யும் பணி நடக்கிறது. முதற்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி, யூனியன், டவுன் பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து பகுதிகளுக்கு ஒரிஜினல் பிரின்ட் ஒன்று வழங்கப்பட்டு, அதை அந்தந்த உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல் நடத்தும் அலுவலகம் மூலம் தேவையான பிரின்ட் தயாரித்து, விதிகளின்படி அனைவருக்கும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, அக்டோபர் 10ம் தேதி முதல் பூத் ஸ்லிப்கள் வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று வழங்கப்படும். அந்தந்த பகுதி ஆசிரியர்கள், சத்துணவுப் பணியாளர்கள், வி.ஏ.ஓ., போன்றோர் மூலம், இந்த ஸ்லிப்கள் வீடுகளுக்கு வழங்கப்படும். வீடுகளில் ஆட்கள் இல்லை எனில், அந்த ஸ்லிப்களை தனியாக சேகரித்து, அந்த வாக்காளருக்கான ஓட்டுச்சாவடியில், வாக்காளர் விபரம் சரிபார்க்கும் அலுவலரிடம் அவை ஒப்படைக்கப்படும். பூத் ஸ்லிப் பெறாதவர்கள், ஓட்டுப்போடும்போது, அங்குள்ள அலுவலரிடம் விபரம் கூறி பூத் ஸ்லிப் பெற வேண்டும். பூத் ஸ்லிப்பில் புகைப்படம் இல்லாதவர்கள், தங்களது புகைப்படம் கொண்ட அடையாள அட்டை, ரேஷன் கார்டு போன்ற ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.






      Dinamalar
      Follow us