ADDED : அக் 17, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து நஞ்சை ஊத்துக்குளி செல்லும் கால்வாய் மூலம், 2,500 ஏக்கர் விவாசய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மழையால் அணைக்கட்டுக்கு நீர்வரத்து அதிகரித்து, பாசனத்து நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், கால்வாயில் கழிவுநீர் கலந்து கருப்பு நிறத்தில் தண்ணீர் செல்கிறது.
இதுகுறித்து கால்வாய் ஆரம்ப பகுதியில் வசிக்கும் முத்தம்பாளையம் பகுதி மக்கள் கூறியதாவது: சூரம்பட்டி அணைக்கட்டுக்கு அருகில் விடப்படும் கழிவுநீர், பெரும்பள்ளம் ஓடையில் தான் கலக்கிறது. இதனால்தான் பாசன கால்வாய் நீர் கருப்பாக மாறிவிட்டது. பெரும்பள்ளம் ஓடையில் கழிவுநீர் கலப்பதை தடுத்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும். இவ்வாறு கூறினர்.