தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/உதவித்தொகையை உயர்த்தக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

உதவித்தொகையை உயர்த்தக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

உதவித்தொகையை உயர்த்தக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 26, 2026 07:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2026 07:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நகர தலைவர் ஆனந்தன் தலைமையில் மூன்று, நான்கு சக்கர வாகனங்களுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மாவட்ட பொருளாளர் கிருஷ்ண மூர்த்தி, நகர பொருளாளர் செந்தில்குமார், நகர செயலர் ரேணுகா, ராஜூ ஆகியோர் பேசினர். சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரம் காக்க, மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். வருவாய் துறை மூலம், 1,500 ரூபாயும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், 2,000 ரூபாய் மாத உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

ஆந்திராவில், 6,000, 10,000, 15,000 ரூபாய் என மூன்று வகையாகவும், புதுச்சேரியில், 3,500, 4,500, 5,500 ரூபாய் என்றும், தெலுங்கானாவில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தலா, 4,016 ரூபாய் வழங்கப்படுகிறது. தமிழக அரசு கடந்த, நான்காண்டாக உயர்த்தாமல் உள்ளதால், வாழ்வாதாரம் காக்கும்படி உயர்த்த வேண்டும். உதவித்தொகை கேட்டு தமிழகத்தில் விண்ணப்பித்துள்ள, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உடன் உதவித்தொகை வழங்க வேண்டும், என வலியுறுத்தினர். இதே போல், தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் சார்பில் சத்தி ஒன்றிய தலைவர் ஆனந்தன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us