/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குடல் கறி குறைந்ததால் தகராறு; தாக்கிய 'பார்' ஊழியர்கள் கைது
/
குடல் கறி குறைந்ததால் தகராறு; தாக்கிய 'பார்' ஊழியர்கள் கைது
குடல் கறி குறைந்ததால் தகராறு; தாக்கிய 'பார்' ஊழியர்கள் கைது
குடல் கறி குறைந்ததால் தகராறு; தாக்கிய 'பார்' ஊழியர்கள் கைது
ADDED : செப் 25, 2024 07:24 AM
பவானி: வெள்ளித்திருப்பூர் அருகே சென்னம்பட்டியை சேர்ந்தவர் அருள்குமார், 29; வழக்கறிஞர். அதே பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இருவரும் மது குடிக்க, இரண்டு நாட்களுக்கு முன், சனி சந்தைக்கு சென்றனர்.
டாஸ்மாக் கடையில் மது வாங்கிய முருகேசன், 'பாருக்கு' சென்று குடல்கறி வாங்கினார். அளவு குறைவாக இருந்ததால் அதுகுறித்து கேட்டுள்ளார். பார் ஊழியரான குமார், 38, சரவணன், 42, உள்ளிட்ட நான்கு பேர், முருகேசனையும், தடுக்க வந்த அருள்குமாரையும் பீர் பாட்டில் தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரில், குமார் மற்றும் சரவணனை கைது செய்த வெள்ளித்திருப்பூர் போலீசார், பவானி நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி, மாவட்ட கோபி சிறையில் அடைத்தனர். தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.