/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'வாட்ஸ் ஆப்' குரூப்பால் தகராறு; 5 பேர் மீது வழக்கு
/
'வாட்ஸ் ஆப்' குரூப்பால் தகராறு; 5 பேர் மீது வழக்கு
'வாட்ஸ் ஆப்' குரூப்பால் தகராறு; 5 பேர் மீது வழக்கு
'வாட்ஸ் ஆப்' குரூப்பால் தகராறு; 5 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 07, 2025 04:23 AM
கோபி: கோபி அருகே பொலவக்காளிபாளையத்தை சேர்ந்தவர் அசோக், 37; ஒத்தக்குதிரையில் சிக்கன் கடை நடத்தி வருகிறார். கடையில் அதே பகுதியை சேர்ந்த சுள்ளான், 30, பணிபுரிகிறார். கோபியை சேர்ந்த கமலக்கண்ணன்வர், 30; இவர் அட்மினாக இருக்கும் வாட்ஸ் ஆப் குரூப்பில் அசோக்கும் உள்ளார். வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அனுப்புவது சம்பந்தமாக, இருவருக்கும் கருத்து வேறுபாடு உள்ளது. இதனால் அசோக்கை வாட்ஸ் ஆப் குரூப்பில் இருந்து
கமலக்கண்ணன் நீக்கினார். இந்த சூழலில் கடந்த, 4ம் தேதி இரவு, அசோக்கும், சுள்ளானும் சிக்கன் கடையில் இருந்தனர். அப்போது கமலக்கண்ணன் உட்பட ஐந்து பேர் வந்தனர். வாட்ஸ் ஆப் மெசேஜ் போடுவது குறித்து சுட்டிக்காட்டி, தகாத வார்த்தை பேசி அசோக்கை தாக்கியுள்ளனர். தடுக்க வந்த சுள்ளா-னையும் தாக்கி, கடைக்குள் பொருத்தியிருந்த 'சிசிடிவி' கேம-ராவை சேதப்படுத்தி சென்றனர். இதுகுறித்து அசோக் கொடுத்த புகாரின்படி, கோபி போலீசார் வழக்குப்
பதிந்து விசாரிக்கின்றனர்.