/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போலீசாரின் அவமரியாதை, அலட்சியம் அலைக்கழிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி
/
போலீசாரின் அவமரியாதை, அலட்சியம் அலைக்கழிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி
போலீசாரின் அவமரியாதை, அலட்சியம் அலைக்கழிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி
போலீசாரின் அவமரியாதை, அலட்சியம் அலைக்கழிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி
ADDED : டிச 22, 2024 01:12 AM
ஈரோடு, டிச. 22-
கொடுமுடி, நகப்பாளையம், சோமண கவுண்டர் வீதியை சேர்ந்தவர் மூர்த்தி, 63; பதிவுத்துறையில் அலுவலக உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற மாற்று திறனாளி.
ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் புகாரளிக்க நேற்று வந்தார். மனு விபரம்: ஈரோடு, வீரப்பன்சத்திரம் ஒரு ஷோரூமில், கடந்த ஆக.,31ல் யமாஹா பைக் வாங்கினேன். ௨.௩௦ லட்சம் ரூபாய் பைக்கிற்கு, 42 ஆயிரம் ரூபாய் செலுத்தினேன். மீதி தொகையை தனியார் வங்கி மூலம் செலுத்த சம்மதித்தேன். இரு தவணை செலுத்தினேன்.
இந்நிலையில் இருதய ஆப்பரேஷன் செய்ததால், இரு தவணைகளை சரிவர செலுத்த முடியவில்லை. வங்கி கலெக்ஷன் ஏஜெண்ட், வீட்டுக்கு வந்து வாக்குவாதம், ரகளை செய்தனர்.
வீட்டில் ரகளையில் ஈடுபட்டது குறித்து, கொடுமுடி போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் இரவு புகாரளித்தேன். புகாரை ஏற்காமல் என்னை ஒருமையில் பேசி, என் மீது வழக்குப்பதிவு செய்வதாக போலீசார் மிரட்டினர். மருத்துவ சிகிச்சையில் இருந்ததால்தான் தொகையை செலுத்த முடியவில்லை. இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார்.
ஆனால், நாளை (௨௩ம் தேதி) எஸ்.பி.,யை சந்திக்க வருமாறு கூறி, மாற்றுத்திறனாளி என்றும் பாராமல், அலுவலக போலீசார் அவரை அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அவரது உறவினர்கள் கூறியதாவது: போலீஸ் ஸ்டேஷன் சென்றால் தீர்வு கிடைக்கும் என்று சென்றவருக்கு அவமரியாதைதான் கிடைத்தது. எஸ்.பி., அலுவலகம் சென்று நடந்ததை கூறலாம் என்றால் அலட்சிய பதில் தான் கிடைத்தது. மனுதாரர்கள் எஸ்.பி.யை சந்திக்க முடியாவிட்டாலும், ஏ.டி.எஸ்.பி.நிலையிலான அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.
ஆனால் மனுதாரர்களை காக்க வைத்தல், அலட்சிய பதில் கூறி அலைக்கழிப்பு செய்யும் நடவடிக்கை எஸ்.பி., அலுவலகத்தில் தொடர தான் செய்கிறது. இப்பிரச்னைக்கு தீர்வு எப்போது தான் கிடைக்கும் என தெரியவில்லை. மாற்றுத்திறன் கொண்ட இருதய நோயாளி அலைக்கழிப்புக்கு ஆளானதுதான் மிச்சம்.
இவ்வாறு கூறினர்.