/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி 252 பணியாளர்களுக்கு 'டேப்' வழங்கல்

ADDED : ஜூலை 09, 2025 01:27 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 'தமிழ்நாடு உரிமைகள் திட்டம்' சார்பில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி நடக்கவுள்ளது.
மாவட்டத்தில், 14 வட்டார அளவில், 1 வட்டாரத்துக்கு, 18 பணியாளர் என, 252 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தலா, 15,000 ரூபாய் மதிப்பில் கையடக்க கணினி ('டேப்') வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் இல்லம் சென்று, அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், உதவித்தொகை போன்றவை சென்று சேர்வதை உறுதி செய்ய கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதற்காக சமூக சேவை வழங்கும் நிறுவனத்தின் முன் களப்பணியாளர், 54 சமுதாய வழிநடத்துனர், 126 சமுதாய மறுவாழ்வு பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வீடு தோறும் சென்று, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் கண்டறிந்து முழு விபரங்கள் அடங்கிய சமூக தரவு தளத்தை உருவாக்க உள்ளனர். வீடுகளுக்கு முன் களப்பணியாளர்கள் வரும்போது ஒத்துழைப்பு வழங்க கலெக்டர் கந்தசாமி கேட்டு கொண்டுள்ளார்.