தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மாவட்ட கலை திருவிழா போட்டி துவக்கம்

மாவட்ட கலை திருவிழா போட்டி துவக்கம்

மாவட்ட கலை திருவிழா போட்டி துவக்கம்


ADDED : ஆக 25, 2026 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2026 05:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு; ஈரோட்டில் மாவட்ட கலைத்திருவிழா போட்டி-களில், 877 மாணவ----மாணவிகள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளி-களில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ - -மாணவிகளின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் வகையில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.நடப்பாண்டு 'இளை யோர் திறன்' என்ற தலைப்பில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்-தப்படுகிறது. 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ - -மாணவிகளுக்கு கலைத்திரு-விழா போட்டிகள் பள்ளி மற்றும் வட்டார அளவில் நிறைவு பெற்றுள்ளன.

32 தலைப்புகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவ-, மாணவிகளுக்கு நேற்று ஈரோடு நந்தா பொறியியல் கல்லுாரியில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டி தொடங்கியது. போட்டிகளை கலெக்டர் கந்தசாமி துவக்கி வைத்தார். பரதநாட்டியம், வில்லுப்பாட்டு போன்ற கலைப்போட்டியில் மாணவ - -மாணவி-களின் கலைத்திறனை பார்வையிட்டார். முதல் நாள் போட்டியில் 9, 10ம் வகுப்பு படிக்கும் 877 அரசு, நிதியுதவி பள்ளி மாணவ--மாணவிகள் பங்-கேற்று திறமைகளை வெளிக்காட்டினர். இன்று பிளஸ் 1, பிளஸ் 2 மாணவிகளுக்கு 32 தலைப்பு-களில் கலைத்திருவிழா போட்டிகள் நடக்க உள்-ளது. இதில் 700 மாணவ - -மாணவிகள் பங்கேற்-கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us