ADDED : ஆக 25, 2026 05:35 AM
ஈரோடு; ஈரோடு நாராயணவலசு, தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய நலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு-களை அகற்றி, டிஜிட்டல் முறை சர்வே செய்து, தங்களுக்கு குடியிருப்பு அமைத்து தரக்கோரி, நாராயணவலசு அம்பேத்கர் நகர் பகுதி மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் முறையிட்-டனர். மனு விபரம்:
நாராயணவலசு, அம்பேத்கர் நகர் பகுதியில், 60 ஆண்டுக்கும் மேல், 256 ஏழைகள் வசிக்கிறோம். கடந்த, 2023ல் எங்கள் குடியிருப்பை பார்வை-யிட்ட அப்போதைய முதல்வர் ஸ்டாலின், 80 சது-ரடியில் உள்ள வீட்டை அகற்றிவிட்டு, 400 சதுர-டியில் புதிய வீடு கட்டித்தரப்படுவதாக உறுதிய-ளித்தார். ஆய்வு செய்த தமிழ்நாடு நகர்ப்புற வாழ்-விட மேம்பாட்டு வாரியத்தினர், டிஜிட்டல் அள-வீடு செய்து, ஆக்கிரமிப்பு அகற்றி வீடு கட்டித்தரு-வதாக கூறினர். இதுவரை டிஜிட்டல் சர்வே செய்து, ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால், மறுகுடியிருப்பு திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. உடனடியாக நட-வடிக்கை எடுத்து, 400 சதுரடியில் முதியோர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், சிறுவர்கள் வச-தியை கருத்தில் கொண்டு குடியிருப்பு கட்டித்தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்-ளனர்.
