ADDED : ஆக 23, 2026 05:43 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
வ.உ.சி., பூங்கா மைதானத்தில், ஈரோடு மாவட்ட தடகள விளையாட்டு போட்டி
தொடக்க விழா நேற்று நடந்தது. தடகள அமைப்பின் செயலாளர் கோவிந்தராஜூ
தலைமை வகித்தார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திவ்யா
நாகேஸ்வரி போட்டிகளை தொடங்கி வைத்தார்.
இதில், 100 மீ., 200 மீ., 1,500
மீ., தட்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல் என பல்வேறு வகையான
போட்டிகள் நடத்தப்பட்டன. பல்வேறு பள்ளிகளை சேர்ந்த, 500-க்கும்
மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். போட்டி இன்றும்
நடக்கிறது.
