தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஆர்.டி.ஓ., அலுவலக இட பிரச்னைக்கு தீர்வு

ஆர்.டி.ஓ., அலுவலக இட பிரச்னைக்கு தீர்வு

ஆர்.டி.ஓ., அலுவலக இட பிரச்னைக்கு தீர்வு


ADDED : ஆக 23, 2026 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2026 05:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெருந்துறை:பெருந்துறையில், 1998 முதல் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் இயங்கியது. 2008-ல் வட்டார போக்குவரத்து அலுவலகமாக (ஆர்.டி.ஓ.,) தரம் உயர்த்தப்பட்டது. அலுவலகம் வாடகை கட்டடத்தில் செயல்பட்டதால், 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்ட முன்மொழியப்பட்டது.

இதற்காக ​பெருந்துறை அரசு மருத்துவக்கல்லுாரி அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் பெருந்துறையிலிருந்து 7 கி.மீ., தொலைவில் வாய்க்கால்மேட்டில் புதிய இடம் தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து பல்வேறு அமைப்புகள், கலெக்டர் குறை கேட்பு முகாமில் மனு கொடுத்து முறையிட்டனர். அரசாணையை மாற்ற முடியாது. வாய்க்கால்மேட்டில் தான் அமையும் என கலெக்டர் திட்ட வட்டமாக தெரிவித்தார். இந்த பிரச்னை வருவாய் துறை துறை அமைச்சர் செங்கோட்டையன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ​மக்களின் சிரமத்தை உணர்ந்த அமைச்சர், அரசாணையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.

மேலும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி பகுதியில் இரண்டு ஏக்கர் பரப்பளவில், ஆர்.டி.ஓ., அலுவலகம் அமைக்க உறுதி அளித்துள்ளார். புதிய கட்டடப்பணி நிறைவடையும் வரை, தற்போது இயங்கி வரும் பழைய இடத்திலேயே ஆர்.டி.ஓ., அலுவலகம் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரின் இந்த நடவடிக்கையால், ஆர்டிஓ., இடப் பிரச்சினைக்கு சுமூகமாக தீர்வு காணப்பட்டுள்ளது. அனைத்து அமைப்புகளும் தமிழக முதல்வருக்கும், நடவடிக்கை எடுத்த அமைச்சர் செங்கோட்டையனுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us