ADDED : ஆக 25, 2025 02:37 AM
ஈரோடு: பள்ளி கல்வி துறை சார்பில் குறுமைய விளையாட்டு போட்டி நடந்தது. இதை தொடர்ந்து மாவட்ட அளவிலான போட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கடந்த, 20ம் தேதி முதல் நடந்து வருகிறது.
இதில் மாணவருக்கான கூடைப்பந்து போட்டி செப்., 2ல் ஈரோடு வி.வி.சி.ஆர். முருகேசனார் பெண்கள் மேல்நிலை பள்ளியிலும், மாணவிகளுக்கு, ௩ம் தேதியும் நடக்கிறது. 14, 17 வயதுக்கு உட்பட்ட மாணவர் ஹாக்கி போட்டி, பவானி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் செப்.,௩ல், 19 வயதுக்கு உட்-பட்ட மாணவர்களுக்கு, 4ல் நடக்கிறது. மேட்டுக்கடை குபேர-லட்சுமி ஸ்போர்ட்ஸ் அகாடமியில் மாணவர்களுக்கு வரும், 28ல், மாணவிகளுக்கு, 29ல் நீச்சல் போட்டி நடக்கிறது. ஈரோடு கொங்-கம்பாளையம் எஸ்.வி.என்., மெட்ரிக் பள்ளியில் ஸ்குவாஷ் போட்டி வரும், 28ல் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியேநடக்கிறது.
எறிபந்து போட்டி எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை அறி-வியல் கல்லுாரியில், மாணவர்களுக்கு செப்., 3, மாணவிக-ளுக்கு, 4ல் நடக்கிறது.
கைப்பந்து போட்டி சத்தி சாரு மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் செப்., 3ல் மாணவர்களுக்கு, 4ல் மாணவிகளுக்கு நடக்கிறது. கைப்பந்து போட்டி செப்., 3ல், 14 மற்றும் 17 வயதுக்கு உட்-பட்ட மாணவ, மாணவியருக்கு தனித்தனியே நம்பியூர் குமுதா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடக்கிறது. கையுந்து பந்து போட்டி 19 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு, 4ல் திண்டல் வி.சி.இ.டி. கல்லுாரியில் நடக்கிறது. இறகுபந்து போட்டி திண்டல் மாயோன் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் செப்., 5ல் மாணவ, மாணவியருக்கு நடக்கிறது. இதற்கான ஏற்பாடு-களை பள்ளி கல்வி துறையினர் செய்துள்ளனர்.